உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம்.
நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும். நகத்திற்கு கீழ் பகுதியில் தான் திசுக்கள் உள்ளது. அந்த திசுக்களில் தான் ரத்த ஓட்டம் காணப்படுகிறது. நகத்தைச் சுற்றி இருக்கும் யூ வடிவம் மாறாமல் இருக்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு நம்முடைய நகம் 3 மில்லி மீட்டர் உயரம் வரை வளரும் இதுவே கோடை காலம் என்றால் கூடுதல் வளர்ச்சி காணப்படும். கால் விரல் ஆனது ஒரு மாதத்திற்கு ஒரு மில்லி மீட்டர் வளர கூடும். இந்த வளர்ச்சி தான் நம் ஆரோக்கியமாக உள்ளோம் என்பதை குறிக்கிறது.
நகம் வளர்ச்சி குறைய காரணங்கள்:
நகத்தில் குறைவான வளர்ச்சி காணப்பட்டால் ஊட்டச்சத்து குறைபாடு, வயது முதிர்வு, அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற காரணங்களாக இருக்கலாம்.
எந்த நிற நிறம் எந்த நோய்க்கான அறிகுறி தெரியுமா?
- நம் நகம் ஸ்பூன் போன்ற வடிவத்தில் வெள்ளை நிறமாக இருந்தால் அது ரத்த சோகை காண அறிகுறியாகும்.
- நகத்தில் உள்ள அனைத்து விரல்களிலும் தொப்பை போன்று வீங்கி இருந்தால் அது உள்ளுறுப்புகளில் உள்ள நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
- நகத்தின் மேல் பகுதி சாதாரணமாகவும் கீழ்பகுதி வெள்ளை நிறமாகவும் காணப்பட்டால் அது கல்லீரல் நோய் (சிரோசிஸ்) மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- நகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தென்பட்டால் அது சொரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கான அறிகுறி ஆகும்.
- நகம் நீல நிறத்தில் காணப்பட்டால் உடலில் ரத்த ஓட்டம் சீறற்றதாக இருக்கிறது என அர்த்தம்.
- நகம் மஞ்சள் நிறமாக இருந்தால் அது மஞ்சள் காமாலை மற்றும் நிணநீர் தேக்க நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
- நகத்தில் கருப்பு நிற கோடுகள் காணப்பட்டால் அது புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
- நகத்தில் வெண் புள்ளிகள் மற்றும் வெள்ளை கோடுகள் இருந்தால் அது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
- நகத்தின் கீழ்பகுதி மட்டும் நிறம் மாறி இருந்தால் அது சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாகும்.
நகத்தை பராமரிக்கும் முறை:
வாரத்திற்கு ஒரு முறை நகங்களை வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். வெட்டுவதற்கு பிளேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது .நக வெட்டிகளை மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.
ஆகவே இந்த நிறங்கள் உங்கள் நகத்தில் தென்பட்டால் அதற்கான சிகிச்சை முறையை எடுத்து கொள்ளுங்கள் .