7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் எனபவருக்கும், சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் கஸ்தூரிக்கும் 8 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கஸ்தூரி 7 மாத காலம் கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் வளைகாப்பு நிகழ்வு நடத்துவதற்காக சுரேஷின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு நேற்று இரவு குடும்பத்தாருடன் புறப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கொல்லம் எக்பிரஸ் ரயிலில் நேற்று இரவு கஸ்தூரி மற்றும் குடும்பத்தார் புறப்பட்டுள்ளனர். அவர்கள், விருத்தாச்சலம் அருகே மாம்பாக்கம் எனும் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் கஸ்தூரி வாந்தி எடுப்பதற்காக ரயில் கதவு அருகே வந்துள்ளார். அப்போது ரயிலில் இருந்து தவ,றி, ஓடிக்கொண்டிருந்த ரயிலின் வெளியே விழுந்துள்ளார்.
உடனடியாக ரயிலில் பயணித்தவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாத காரணத்தால் வேறு பெட்டியில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை 5 கிமீக்கும் அப்பால் நிறுத்தினர். பின்னர் கிழே விழுந்த கஸ்தூரியை சுமார் 2 மணிநேரமாக உறவினர்கள் தேடி கண்டுபிடித்துள்ளனர். படுகாயங்களுடன் இருந்த கஸ்தூரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைகிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 7 மாத கர்பிணியான கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் பிரேத பரிசோதனை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி வயிற்றில் 7 மாத ஆண்குழந்தை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் கஸ்தூரியின் உடல் ஒப்படைக்கப்பட்டது..
இதற்கிடையில், விபத்து நடந்த விவரம் குறித்து விருத்தாசலம் கோட்டாச்சியர் அகமது, உயிரிழந்த கஸ்தூரியின் உறவினர்களிடம் தங்கள் விசாரணையினை தொடர்ந்துள்ளார்.