அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

akshaya tritiya

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம்.

அட்சய திருதியை 2024:

இந்த ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு துவங்கி மே 11 ந்தேதி  2. 50 க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது.

அட்சய திருதியை என்றால் என்ன?

அட்சய திருதியை என்பது நவகிரகங்களில் தந்தை கிரகமான சூரியனும், தாய் கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலம் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது .அதாவது சூரியன் தனது உச்ச ராசியான மேஷ ராசியிலும் சந்திரனின் உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாளாகும்.

அட்சய  என் என்றால் பூரணமானது, வளர்கிறது,குறைவில்லாதது  என்று பொருள் .சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியைத்தான் அட்சய திருதி என கொண்டாடுகிறோம். மேலும் இந்நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் ,எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது மென்மேலும் பெருகும்.

அதனால்தான் இந்நாளில் நல்ல காரியங்களை செய்ய மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலரோ அட்சயதிருதிக்காக கடன் வாங்கியாவது நகை வாங்க வேண்டும் என்று யோசிப்பார்கள் அவ்வாறு செய்தால் கடன் மேலும் பெருகும்.

அட்சய திருதியை சிறப்புகள்:

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும் .  இந்த நாளில் தான் விஷ்ணு பகவான் பரசுராமன் அவதாரம் செய்த நாள் . அஷ்டலட்சுமிகளில் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தானிய லட்சுமி அவதரித்த நாளாகும். மகாலட்சுமி தாயார் திருமாலின் மார்பில் இடம் பிடித்த நாளும் இன்று தான்.

இன்று தான் குபேரன் ஐஸ்வர்ய கலசங்களை பெற்ற நாளாகும். மேலும் சூரிய பகவான் பாண்டவர்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை கொடுத்த நாளும் இன்று தான்.

ஆனால் அட்சய திருதியை நம் மக்கள் வேறு விதமாக கூறி வைத்துள்ளனர்.இன்றைய நாளில்  தங்கம் வாங்கினால்  தங்கம் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று கூறி  வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறாகும்.

இந்நாளில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும்.அட்சய திருதியில் தங்கம் வாங்குதல் என்பது ஒரு 20 ஆண்டுகாலமாக தான் வழக்கமாக  இருந்து வருகிறது.இன்றைய தினத்தில் தானம் செய்வதுதான் சிறப்பாகும். அதிலும் நீர்தானம், மோர் தானம் ,வஸ்திரதானம், அன்னதானம் போன்றவற்றை செய்யலாம்.

மகிழ்வித்து மகிழ் என்ற பொன்மொழி உள்ளது இதன்படி நம்மால் முடிந்த உதவியை தேவைப்படுபவர்களுக்கு இந்நாளில் செய்தால் அவர்களின் மகிழ்ச்சியை பார்க்கும்போது வரும் திருப்தி எத்தனை பவுன் நகை வாங்கினாலும் ஈடாகாது. ஆகவே தானத்தை செய்து புண்ணியத்தை பெருக்குங்கள்.

இன்றைய தினத்தில் வாங்க வேண்டிய பொருட்கள்:

இன்றைய தினம் தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று இல்லை. அவரவர் சக்திக்கேற்ப மகாலட்சுமியின் அம்சமான ஏதேனும் ஒரு பொருளை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபடலாம்.இன்று லட்சுமி நாராயணன் வழிபாடு செய்வது சிறப்பாகும் .

உப்பு, தானியங்கள், சங்கு, அரிசி போன்ற  உணவுப் பொருட்கள் கூட வாங்கலாம். இந்த அட்சய திருதியைக்கு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற தவறான கருத்தை  தவிர்க்க வேண்டும்.

ஆகவே அட்சய திருதியையின் தாட்பாரியத்தை தெரிந்து கொண்டு இன்நாளை கொண்டாடி மகிழுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்