என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Fans

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் . இந்த தொடரில் தகுதி அடைந்துள்ள அணிகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல்-30 ம் தேதி அன்று பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதனால் பலவித கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

இதை தொடர்ந்து இந்திய அணியை அறிவித்த பிறகு, அந்த இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார்கள், இதனால் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல்-30 தேதி, அதாவது நேற்று முன்தினம் இந்திய அணியை அறிவித்த அன்று ஐபிஎல் தொடரின் இரவு போட்டியாக மும்பை அணியும், லக்னோ அணியும் மோதியது.

இந்த போட்டியில் மும்பை அணியில் உள்ள இந்தியா அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இந்த 3 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் தான். ஆனால் பிசிசிஐ அணியை அறிவித்த பிறகு இந்த 3 வீரர்களும் அன்றைய போட்டியில் 10 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்து சொதப்பினார்கள். மேலும், ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் மட்டும் சற்று சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அதே நேரம் நேற்றைய சென்னை, பஞ்சாப் போட்டியை பார்க்கையில்,  அங்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் பஞ்சாப் அணியில் உள்ள அர்ஷிதீப் சிங் என இந்த 3 வீரர்களும் நேற்றைய போட்டியில் சொதப்பினார்கள். அதே போல் சிவம் துபே 1 ஓவர் பந்து வீசி அதில் 1 முக்கிய விக்கெட்டையும் எடுத்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் இவர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் ரசிகர்கள் இந்த 6 வீரர்களையும் சுட்டி காட்டி, ” என்னதான் ஆச்சு ? இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு ஏன் இப்படி மோசமாக விளையாடுகிறீர்கள்” என்று சமூகவலைதளங்களில் அவரகளது கருத்தை வருத்ததுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி கொண்டிருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு ரசிகர்கள் பிசிசிஐ இப்பொது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்