வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம்.

சர்வதேச நடனத் தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பின் சார்பாக,” நமது மாஸ்டர் நமது முன்னாடி” என்ற தலைப்பின் கீழ், நடனம் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி நடன இயக்குநர் பிரபு தேவாவிற்கு அர்பணிக்கும் விதமாகவும், உலக சாதனை படைக்கும் வகையில், பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு சுமார் 5000 மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் 100 நிமிடங்களுக்கு தொடர்ந்து நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 9 மணி கடந்தும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சிறுவர்கள் மயக்கமடைந்தனர்.

இதனால், சிறுவர்களின் பெற்றோர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நபர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உணவு மற்றும் கழிவறை வசதி ஏதும் செய்யாதது குறித்து பெற்றோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இது சர்ச்சையான நிலையில்,  உடல்நலக்குறைவால் தன்னால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என ஐதராபாத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மன்னிப்பு தெரிவித்தார். அந்த வீடியோ அங்கிருந்த பெரிய திரையில் ஒளிப்பரப்பட்டது.

உலக சாதனை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டு தோல்வியில் முடிந்ததால், இறுதியில் பிரபு தேவாவிற்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்