ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான 21 வயதான இளம் வீரர் மயங்க் யாதவ் மொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது பந்து வீச்சில் சிறப்பான அம்சம் என்வென்றால் மணிக்கு 156 கீ.மி வேகத்தில் பந்தை வீசுவார் அதிலும் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் வித்தியாசமான லைன்னில் பந்தை வீசுவார். இவரது மிகசிறந்த பேட்மேன்கள் கூட தடுமாறி இருக்கின்றனர்.
இவர் அறிமுகமான முதல் போட்டியிலே சிறப்பாக பந்து வீசி அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும், தொடர்ந்து அடுத்த போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். அதன் பிறகு அடி வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மும்பையுடனான போட்டியில் இவர் மீண்டும் களமிறங்கினார்.
அந்த போட்டியிலும் 3 ஓவர்கள் முழுவதுமாக பந்து வீசிய இவர் 4-ஓவரில் முதல் பந்தை வீசிய போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இதை பற்றி லக்னோ அணி தரப்பில் கூறுவது என்னவென்றால், மயங்க் யாதவுக்கு அடிவயிற்றில் சதை கிழுவு ஏற்பட்டிருக்கலாம், இதனால் அவர் எஞ்சியுள்ள போட்டியில் விளையாடா முடியாமல் போகலாம், மேலும் ஒரு வேளை லக்னோ அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் கூட நாங்கள் அவரை விளையாட வைக்கலாம்.
ஆனால், அவரது உடலுக்கு அது நல்லதில்லை என லக்னோ அணி தரப்பில் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேக பந்து வீச்சாளருக்கு தரும் சிறப்பு ஒப்பந்தம் வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு வேளை அவருக்கு அந்த ஒப்பந்தம் கிடைத்தால் காயத்துக்கான சிகிச்சை பொறுப்பை தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு பொறுப்பேற்று ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.