502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

நாம் உபயோகிக்கும் இணையத்தில் பல்வேறு தேடுதளங்கள் அதாவது தேடுபொறிகள் (Search Engine) இருந்தாலும் நமக்கெல்லாம் எளிமையாகவும் உலகின் பலதரப்பட்ட மக்களால் உபயோகிக்கும் ஒரு தேடுபொறி தான் கூகுள் தேடுபொறி (Google Search Engine). இப்படி இருக்கயில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேரு இடங்களில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்தும் பலதரப்பு மக்கள் தங்களுக்கு இந்த கூகுள் தேடுபொறி செயலிழந்து உள்ளதாக X தளத்தில் புகார்கள் அளித்து வருகின்றனர்.

அதே நேரம், கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில் (Gmail), யூடியூப் (Youtube), கூகுள் மேப்ஸ் (Google Maps) மற்றும் கூகுள் டாக் (கூகுள் டாக்) ஆகியவை வேலை செய்வதாக கூறுகிறார்கள். ஆனால், பல ஆதாரங்களில் இருந்து நிலை அறிக்கைகளைத் சேகரித்து செயலிழப்பைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டரின் படி கூகுள் தேடுபொறி உட்பட கூகுள் சேவைகள் பலவும் செயல்படவில்லை என டவுன்டிடெக்டரின் தரவுகள் படி பயனர்கள் சமூக வளைத்தளங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

மேலும், டவுன்டிடெக்டரின் படி இங்கிலாந்து நாட்டில் 300-க்கும் மேற்பட்ட பயனர்களும், அமெரிக்க நாட்டில் 1,400-க்கும் மேற்பட்ட பயனர்களும் கூகுள் தேடுபொறியை உபயோகிக்க முயற்சிக்கும் போது பல சிக்கல்களை எதிர்கொண்டதாக புகார்களில் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அமெரிக்கவில் இருக்கும் நியூயார்க், டென்வர், கொலராடோ மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில் தான் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளது.

அதே நேரம் கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில் (Gmail), யூடியூப் (Youtube), கூகுள் மேப்ஸ் (Google Maps) மற்றும் கூகுள் டாக் (Google Talk)  ஆகியவை சிக்கல்கள் இல்லாமல் ஒரு சில இடங்களில் வேலை செய்வதாக தெரிகிறது. டவுன்டிடெக்டரின் படி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 100 பயனர்கள் கூகுள் மேப்ஸில் சிக்கலை எதிர்கொள்வதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து பல தரப்பினர்கள் X உள்ளிட்ட சமூக தளங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், Google Down (கூகுள் டௌன்) என்ற ஹேஷ்டேக்குடன் தங்களது கருத்துக்களை பயனர்கள் X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் தங்களுக்கு 502 error என்று காட்டுவதாக கூறி புகைப்படத்துடன், தங்களது கருத்துக்களை X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Google Down
Google Down

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்