லட்ச கோடி ரூபாய்… துபாயில் உலகின் பிரம்மாண்ட விமான நிலையம்.!

Sheikh Mohammed

Dubai: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் தாயகமான துபாய், உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்குவது மூலம் அடுத்த உயரமான விஷயமாக பெருமை கொள்கிறது.

ஆம், துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில், 26 கோடிப் பயணிகளை கையாளும் வகையில், ரூ. 2.9 லட்சம் கோடி செலவில் உருவாகிறது.

70 சதுர கி.மீ பரப்பளவில் 5 ஓடுபாதைகளுடன், 400 விமானங்கள் நிறுத்தும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், இந்த புதிய விமான நிலையமானது தற்போதைய விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

அட ஆமாங்க….அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்கால சந்ததியினருக்காக ஒரு புதிய திட்டத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறோம். இதில், முதன்முறையாக புதிய விமானத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்