கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது? எம்மாடி எப்படி ஆடுறாங்க பாருங்க!
Ghilli : கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர் நடனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தெலுங்கை விட தமிழில் வெளியான இந்த கில்லி படம் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அந்த சமயம் ஹிட்டான இந்த கில்லி திரைப்படத்தை சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. வசூல் ரீதியாக 25 கோடிகளை தாண்டியுள்ளது. இன்னும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து, இந்த படத்தில் நடித்த பிரபலன்களுடைய பெயரும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நான்சி ஜெனிபர். இவருக்கு இந்த திரைப்படம் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது நான்சி ஜெனிபர் ரொம்பவே சின்ன பெண்ணாக இருந்தார். ஆனால், படம் வெளியாகி வருடங்கள் ஆகி இருக்கும் நிலையில், தற்போது நான்சி ஜெனிபர் ஆளே அடையாமல் தெரியாமல் மாறியுள்ளார். அவர் லேட்டஸ்ட்டாக தனது தோழிகளுடன் நடனம் ஆடி கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் கில்லில நடிச்ச புள்ளதானே இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கில்லில நடிச்ச புள்ளதானே இது ???? pic.twitter.com/0wtn4w2BkB
— ❤️????°°ட்விட்????காதலன்°°❤️???? (@Elanthaari_Paya) April 28, 2024