கேட்கவே செமயா இருக்கு! குட் பேட் அக்லி படத்தில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

GoodBadUgly : அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன், மீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்கு கொஞ்சம் விடுமுறை விட்டுவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை கையில் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை திரிஷா இல்லைனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பலரும் எதிர்பார்த்ததை விட அதற்கு முன்னதாகவே தொடங்கப்படவுள்ளது. அதன்படி, இந்த குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் தொடங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது படத்தில் யாரெல்லாம் நடிக்க வைக்கலாம் என்பதற்கான தேர்வுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த படத்தில் நடிக்க வைக்க இரண்டு 90ஸ் காலகத்தில் கலக்கி வந்த நடிகைகளை ஆதிக் ரவிசந்திரன் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அந்த நடிகைகள் வேறு யாரும் இல்லை மீனா மற்றும் சிம்ரன் தான். இவர்கள் இருவரையும் தான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.
ஏற்கனவே, அஜித்திற்கு ஜோடியாக இந்த இரண்டு நடிகைகளும் சில படங்களில் நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக சிம்ரன் அஜித்திற்கு ஜோடியாக அவள் வருவாளா, உன்னை கொடு என்னை தருவேன், வாலி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அனந்த பூங்காற்றே, வில்லன் , சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சிம்ரன் மற்றும் மீனா இருவருமே அஜித்திற்கு ஜோடியாக நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. எனவே, அவர்கள் இருவருமே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் அவருடைய படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. உண்மையில் இவர்கள் எல்லாம் படத்தில் நடிக்கிறார்களா என்பதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்ரன் மற்றும் மீனா நடிப்பது லேட்டஸ் தகவல் தான். ஆனால், அதற்கு முன்னதாகவே படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பாபி தியோல் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025