செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது… சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை!

senthil balaji

Senthil balaji: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாத்துறை கைது செய்தது. இதன்பின் பல்வேறு கட்ட விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக இருப்பதால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது, இதனால் அவருக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என்றும் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது மன்னிப்பு கோருவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இதன்பின் செந்தில் பாலாஜி தரப்பில் கூறியதாவது, நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதாகவும், இந்த வழக்கில் வேண்டுமென்றே தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்