ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! கொல்கத்தா – டெல்லி இன்று பலப்பரீட்சை !!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது.
இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற முனைப்போடு இந்த போட்டியில் விளையாடுவார்கள்.
மேலும், இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போது கொல்கத்தா அணி 100+ ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 33 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 18 முறை கொல்கத்தா அணியும், 15 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாமல் இருக்கிறது. நேருக்கு நேரில் கிட்ட தட்ட சமமாக இருப்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
டெல்லி கேபிட்டல்ஸ்
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் , சுமித் குமார், ரசிக் தார் சலாம், அன்ரிச் நார்ட்ஜே , இஷாந்த் சர்மா, கலீல் அகமது. தாக்கம் துணை: அபிஷேக் போரல்.
கொல்கத்தா அணி வீரர்கள் :
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.