பொங்கலுக்கான முன்பதிவு செப்.9இல் தொடக்கம்..!!

Default Image

சென்னை;
தமிழகத்தில் தைத்திருநாள் பண்டிகைக்கான ரயில்வே முன் பதிவு  வரும் செப்.,9 இல் தொடங்க உள்ளது.தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான தைப் பொங்கல் பண்டிகை
நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், தமிழர்கள் வாழும்
அனைத்து நாடுகளிலும் இப்பண்டிகை யானது கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில்வே முன் பதிவானது 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும். இந்தாண்டு ஜன.,11 வெள்ளியன்று தைத்திருநாள் கொண்டாட்டம் தொடங்க உள்ளது. ஜன.,13 ல் போகிப்பண்டிகை ,ஜன.,14 திங்களன்று தைப் பொங்கல் ,ஜன.,15 ல் மாட்டுப் பொங்கல் என தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. பின்பு, மத்திய அரசு காளைகளை காட்சிப் படுத்தப்படும் பட்டியலில் இருந்து விலக்க அவசர சட்டம் இயற்றியது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு காலதாமதமாகவே நடத்தப்பட்டது.

எனவே, தமிழர்கள், தைத்திரு நாளை வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், வட மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் தங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வாறு, வெளியூரில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊரில் தைத்திருநாளை குடும்பத்துடன் கொண்டாடவே விரும்பு கின்றனர். இதற்காக ரயிலில் முன்  பதிவு செய்து பயணம் மேற்கொள்வதே  ஏராளமானோரின் விருப்பமாக உள்ளது.

Image result for தைப் பொங்கல்

ரயில் முன் பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட் அனைத்தும் விற்று, காத்திருப்போர் பட்டியல் நீளும் நிலை உள்ளது.தனியார் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை காரணமாக, பலர், ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மேலும், உடற் சோர்வின்றியும், குடும்பதுடனும் பயணம் செய்ய ரயில் பயணமே சிறந்தது என்பதால், பலர் முன் கூட்டியே திட்டமிட்டு, ரயிலில் முன் பதிவு செய்கின்றனர்.

ஜனவரி 11 வெள்ளிக்கிழமைக்கான முன் பதிவு செப்.9அன்றும், ஜன.12 க்கான முன் பதிவு செப்.10 அன்றும்,ஜன.13 க்கான முன் பதிவு செப்.11 லிலும் நடைபெற உள்ளது.தைப்பொங்கல் மற்றும் தீபாவளி  முன் பதிவானது ஒரு சில நிமிடங்களி லேயே முடிவடைந்து விடுகிறது. எனவே, ரயில்வே நிர்வாகமானது, ஏழை, எளிய மக்கள் பயன்படும் விதத்தில் சென்னையிலிருந்து கூடுத லான சிறப்பு ரயில்களை பொங்கலுக்கு முன்பும், பின்பும் இயக்கிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்