துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் சமந்தா! பிறந்த நாள் அதுவுமா உங்களை இப்படியா பாக்கணும்?
Samantha : சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள பங்காரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த போதிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. இப்போது பட வாய்ப்புகள் இல்ல என்றாலும் கூட இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இன்று சமந்தா தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் தெலுங்கில் நடிக்கும் படம் ஒன்றுக்கான முதல் பார்வை வெளியிடபட்டுள்ளது. சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் அவரே தயாரித்து பங்காரம் என்ற அதிரடியான படத்தில் சமந்தா நடித்துள்ளார்.
எனவே, அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் பங்காரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா வில்லத்தனமான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டரை பார்க்கும்போதே இந்த படம் எந்த மாதிரி ஒரு கதையம்சத்தை கொண்ட படம் என்ற எதிர்பார்ப்பையும் அதிகமாக்கி இருக்கிறது.
On the occasion of her birthday today, pan Indian star #SamanthaRuthPrabhu announces her maiden feature film venture under her banner #TralalaMovingPictures. She released the motion and static poster..
Tentatively titled #Bangaram, this Telugu film marks Samantha’s feature… pic.twitter.com/irS6M8rVbA
— Ramesh Bala (@rameshlaus) April 28, 2024
போஸ்ட்டரை பார்த்த பலரும் பிறந்த நாள் அதுவுமா உங்களை இப்படியா பாக்கணும்? என்று நகைச்சுவையாக கூறி வருகிறார்கள். மேலும், இந்த பங்காரம் படம் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.