16 பாயிண்ட் எடுத்தும் பிளே ஆஃப் போகாத ராஜஸ்தான்! காரணம் என்ன தெரியுமா?
Rajasthan Royals : 16 புள்ளிகளை பெரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதிப்படுத்தவில்லை.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பார்மில் விளையாடி கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 9போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசியாக நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை கிட்டத்தட்ட உறுதி செய்தது.
இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் 5 போட்டிகள் விளையாடவுள்ளது. அந்த 5 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட கண்டிப்பாக 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்துவிடும்.
16 புள்ளிகளை இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்று இருந்தாலும் கூட புள்ளி விவரப்பட்டியலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் “Q” சிம்பிள் அதிகாரப்பூர்வமாகவே கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) தவிர, மற்ற அனைத்து அணிகளும் 16 புள்ளிகளை எட்டிவிட முடியும்.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்னும் 5 போட்டிகள் விளையாடவுள்ளது. அந்த 5 போட்டிகளிலும் 5 வெற்றிகளை பெற்று மொத்தமாக 8 வெற்றிகளை பெற வேண்டும். அப்படி பெற்றுவிட்டது என்றால் கண்டிப்பாக புள்ளி விவரப்பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்துவிடும். எனவே, இதன் காரணமாக தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளை பெற்றும் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதிப்படுத்தவில்லை. வரும் போட்டிகளில் வெற்றிபெற்று அதனை உறுதி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.