அக்னி நட்சத்திரம் 2024 இல் எப்போது? செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

agni natchathiram

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரத்தில் ஏன் வெயில் அதிகமாக இருக்கிறது இன்று இப்பதிவில் காணலாம்.

பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள்.

அக்னி நட்சத்திரம் 2024:

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 இல் தொடங்கி வைகாசி பதினைந்தில் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம்  தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது.

அக்னி நட்சத்திரம் உருவான கதை:

ஸ்வேதகி என்ற மன்னன் 12 ஆண்டுகளாக யாகம் செய்து வருகிறார் . அந்த யாகத்தில் நெய்யை அதிக அளவு ஊற்றுகிறார் ,இதன் காரணமாக அக்னி பகவானுக்கு தீராத பசி ஏற்படுகிறது.

இந்த பசியை போக்க பிரம்ம தேவனிடம் சென்று வழி  கேட்கின்றனர். அதற்கு அவர், நந்தவனத்தை விழுங்க வேண்டும் என கூறுகிறார். அவ்வாறு அக்னி தேவன் நந்தவனத்தை விழுங்கச் செல்லும் போது இந்திர பகவான் அதை தடுத்து மழை பொழிய செய்கிறார்.

அக்னி தேவனோ விஷ்ணு பகவானிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். அப்போது அர்ஜுனன் காட்டின் மேற்புறத்தில் கூரை அமைத்து மழை வராமல் பாதுகாக்கிறார். கிருஷ்ண பகவான் அக்னி தேவனுக்கு ஒரு நிபந்தனையும் இடுகிறார், அதாவது இதற்காக 21 நாட்கள் வரையறுக்கிறார்.

அதன்படி அக்னிதேவன் முதல் ஏழு நாட்கள் பூமியின் கீழ்ப்பகுதியை உண்கிறார். அதனால் வெப்பம் பூமியில் மெதுவாக பரவ துவங்குகிறது. அடுத்த ஏழு நாட்கள் பெரிய மரங்களை விழுங்குகிறார்.இந்த காலகட்டத்தில் அதிக வெப்பம் இருக்கிறது.

இறுதி ஏழு நாட்களில் பாறையை விழுங்க தொடங்குகிறார் இதனால் வெப்பம் படிப்படியாக மிதமாக்கப்படுகிறது. இதுவே அக்னி நட்சத்திரம் உருவான கதை என புராணங்கள் கூறுகிறது.

பஞ்சாங்கம்:

பஞ்சாங்கத்தின் படி பரணி நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் துவங்கி ரோகினி நட்சத்திரத்தில் முதல் பாதம் வரை சூரிய பகவான் ஆட்சி புரியும் காலம் என கூறப்படுகிறது .

அறிவியல் காரணங்கள்:

அறிவியலின்படி சித்திரை வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் செல்வதால் வெப்பம் அதிகமாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.

அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவைகள்:

புது வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலை முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல் ,மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் ,பூமி பூஜை போன்றவற்றை  செய்யக்கூடாது.

செய்யக்கூடியவைகள்:

திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். மேலும் இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர் தானம், அன்னதானம், கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம்  அக்னி தேவனின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.

மேலும் பரணி நட்சத்திரத்திற்குரிய துர்க்கை அம்மன் வழிபாடு ,பிரம்மன் வழிபாடு, அக்னியின் அம்சமாக கூறப்படும் முருகப்பெருமான், சிவபெருமான் வழிபாடுகளை மேற்கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.

ஆனால் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கமும் வெப்ப காற்றும் அதிகமாகத்தான் இருக்கிறது .ஆகவே இந்த 21 நாட்கள் மிகக் கடுமையான வெயில் இருப்பதால் ஒவ்வொருவரும் உங்களை தற்காத்துக் கொள்வது அவசியமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்