எம்.ஜி.ஆர் என்றால் சும்மாவா! ஒரே ஒரு போட்டோவை வச்சு படத்தை ஹிட் செஞ்ச சம்பவம்!

M.G.Ramachandran : புகைப்படம் ஒன்றை வைத்து எம்.ஜி.ஆர் ஒரு படத்தை ஹிட் ஆக்கியுள்ளார்.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் ஆகும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆவது போல அவர் நடித்த படங்களின் காட்சிகள் மற்றோரு படத்தில் இடம்பெற்றால் கூட அந்த படங்களுமே ஹிட் ஆகிவிடும்.
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அந்த சமயம் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அப்படி தான் ஒருமுறை எம்.ஜி.ஆரின் புகைப்படம் ஒன்று ஒரு படத்தின் அறிமுக காட்சியில் இடம்பெற்று அந்த படமே சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. எம்.ஜி.ஆர் நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் நம்பிராஜன் குங்கும பொட்டின் என்ற சிறிய பட்ஜெட் படம் ஒன்று எடுத்து இருந்தாராம்.
அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவேண்டும் என்ற காரணத்துக்காக தயாரிப்பாளர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்து இருந்த குங்குமப்பொட்டின் மங்களம் என்ற பாடலை வைத்து இருந்தாராம். அதுவும் அந்த சமயம் படத்திற்கு பெரிய ப்ரோமோஷனாகவும் அமைந்ததாம்.
இந்த படத்தை போட்டு கட்ட தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க சென்றாராம். படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என்று கூறி அந்த தயாரிப்பாளரை கட்டியணைத்து புகைப்படம் எடுத்தாராம். எடுத்துவிட்டு இந்த புகைப்படத்தை படத்தின் துவக்கத்தில் வையுங்கள் என்று கூறினாராம். அவர் கூறியவுடன் அந்த தயாரிப்பாளரும் புகைப்படத்தை வைத்தாராம். அவருடைய புகைப்படத்தை வைத்ததும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் படத்தை கொண்டாடினார்களாம். படமும் சூப்பர் ஹிட் ஆனதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025