ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்!

Top 5 Highest Scorers

IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இருந்தாலும் வரும் போட்டிகளை பொறுத்து புள்ளி பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இந்த முறை ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்தவையாக உள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும் ஆட்டம் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அதிகபட்ச ரன்களை குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தது வருகின்றனர்.

அந்தவகையில் இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ரன்களை அடித்த முதல் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆல் ரவுண்டர்  மார்கஸ் ஸ்டோனிஸ் சென்னை அணிக்கு எதிராக 124* ரன்கள் அடித்திருந்தார்.

இதுவே ஐபிஎல் ரன் சேஸிங்கில் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதன்மூலம் பவுல் வால்தட்டியின் 13 ஆண்டுகால சாதனையை மார்கஸ் ஸ்டோனிஸ் முறியடித்தார். அதாவது, கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதே சென்னை அணிக்கு எதிராக அப்போது இருந்த பஞ்சாப் அணி வீரர் பவுல் வால்தட்டி ரன் சேஸிங்கில் 120 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

இதுதான் ரன் சேஸிங்கில் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், தற்போது நடப்பு சீசனில் மார்கஸ் ஸ்டோனிஸ் அந்த சாதனை முறியடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து முன்னாள் இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார். 2011 ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடிய வீரேந்திர சேவாக் ரன் சேஸிங்கில் 119 ரன்கள் அடித்திருந்தார்.

அதேபோல் 2021 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனும் 119 ரன்கள் நடித்திருந்தார். மேலும், 2018ல் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் 117 ரன்களை அடித்து 5ஆவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE