27 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்! மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனை மற்றும் ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது வோட்டர் ஐடியுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணாக போலி அட்டைகள் கண்டு பிடிக்க முடியும் என மத்திய அறிவித்திருந்தது.
டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதன்மூலம் போலி வங்கிப் பணப் பரிவர்த்தனை களைக் கண்டறிந்து, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களையும் அடையாளம் காண முடிகிறது என்றும், அதேபோல் சமையல் வாயு இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால் 3 கோடி போலி சமையல் இணைத்து கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 27 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, நேரடி மானியத் திட்டம் மூலம் அரசுக்கு சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மீதமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.