2 அரை மணி நேரம் என் மூஞ்ச யாரு பாப்பாங்க? டென்ஷனான எம்.ஜி.ஆர்!
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் எம் ஜி ஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் தன்னுடன் அடுத்தடுத்த படங்களில் எந்தெந்த நடிகர்கள், நடிகைகள், நடிக்க வேண்டும் என்பதை முதலிலேயே தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களுடைய கால்ஷீட் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படி தான் சரோஜாதேவி மற்றும் நாகேஷ் இருவரையும் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாகவே நடிக்க கமிட்டாக வைத்து விடுவார்.
ஒருமுறை ஒரு படத்தின் தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் படத்தை பற்றி பேசிவிட்டு இந்த படம் முழுவதும் உங்களுடைய கதாபாத்திரம் மட்டும்தான் அதிகமாக தெரிய வைப்பது போல எடுக்கப்பட வேண்டும் என்று கூறினாராம். அப்போதும் எம்.ஜி.ஆர் அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் படத்தில் முதன் முதலாக நாகேஷை நடிக்க வைக்க கமிட் செய்து விடுங்கள் என்று கூறினாராம்.
அதற்கு அந்த தயாரிப்பாளர் நாகேஷ் என்ன பெரிய நாகேஷ் எம்ஜிஆர் உடைய மார்க்கெட் இப்போது எங்கு இருக்கிறது எம்ஜிஆர் நீங்களே இப்படி சொல்லலாமா நீங்கள் மட்டும் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று கூறினாராம் . அதற்கு சற்று டென்ஷான எம்.ஜி.ஆர் இரண்டு மணி நேரம் என்னுடைய முகத்தை மட்டும் படம் முழுவதும் காட்டினால் யாருமே பார்க்க மாட்டார்கள் அவர்களுக்கு போர் அடித்து விடும்.
நாகேஷ், மனோரம்மா போன்ற நடிகர்கள் நம்மளுடைய படத்தில் இருந்தால் மட்டும் தான் படமும் நன்றாக இருக்கும். பார்வையாளர்களுக்கும் கலகலப்பாக இருக்கும் எனவே முதலில் நீங்கள் நாகேஷை இந்த படத்தில் நடிக்க கமிட் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனை சொல்வது மிகப்பெரிய விஷயம் என இந்த தகவலை வியப்புடன் இயக்குனர் விஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.