பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பானக்கத்தின் நன்மைகள்:
- பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள், நேத்திக்கடன்கள், பாதயாத்திரை செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும்.
- இந்த காலங்களில் வெயிலின் தாக்கமும் சற்று கொடூரமாக இருக்கும். இதனை சமாளிக்க பானகம் மிகச் சிறந்த பானமாகும்.விரதம் இருப்பவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் .
- இந்த பானகத்தை பானக்கம், பானகரகம், பானகம் என வெவ்வேறு பெயர்களால் ஒவ்வொரு ஊர்களிலும் அழைக்கப்படுகிறது.
- ஆயுர்வேதத்தில் உடனடி குளுக்கோஸ் என்று கூறப்படுகிறது. ஒரு சில மருந்துகளை சாப்பிட்ட பிறகு அது நம் உடல் உறிஞ்சுவதற்கு சில நேரம் எடுக்கும். ஆனால் இந்தப் பானகத்தை எடுத்துக்கொண்ட அடுத்த நொடியே நம் உடல் உறிஞ்சி உடனடி எனர்ஜியை கொடுக்கும்.
- பானகம் சாப்பிடுவதால் உடல் சோர்வு உடனடியாக நீங்கும். வியர் குரு வராமல் பாதுகாக்கும். தொண்டை கரகரப்பு ,அஜீரணம் போன்றவற்றை சரி செய்யும்.
- இனிப்பும் குளிப்பும் கலந்து இருப்பதால் நம் உடலுக்கு உடனடி புத்துணர்வை கொடுக்கக் கூடியது.
வெப்ப பக்கவாதம் [heat stroke]
- உடலில் உள்புறத்தில் வெப்பநிலை 40 டிகிரி மேல் சென்றால் நமது இதயம் சுருங்கி விரிவது அதிகமாகும் .வெப்பத்தை ரத்தம் மூலம் தோல் பகுதிக்கு மேல்புறத்தில் வியர்வையாக வெளியேற்ற முயற்சி செய்யும்.
- இதனால் இதயத்தின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதனை தடுப்பதில் பானாக்கம் சிறந்த பானமாகும்.
பானகம் செய்முறை:
- நெல்லிக்காய் அளவு புளியை அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை கப் வெல்லத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளவும் .
- வெல்ல கரைசலில் அரை ஸ்பூன் சுக்கு ,அரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், உப்பு கால் ஸ்பூன், எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் கூடவே புளி கரைசலையும் வடிகட்டி சேர்த்து ஒரு மண்பானையில் ஊற்றி ஒரு மணி நேரம் வைத்து விடவும்.
- மண்பானையில் வைக்கும் போது இயற்கையான முறையில் குளிர்விக்கப்படுகிறது. இதனை நாம் அருந்தும் போது உடனடி எனர்ஜியை கொடுத்து உடல் வெப்பத்தை குறைகிறது.
இந்த வெயில் காலத்தில் டீ, காபி, சோடா, குளிர் பானங்கள் போன்றவை நம் உடலில் உள்ள நீர் சத்தை வெளியேற்றத் தான் செய்யும். அதனால் இதனை தவிர்க்க வேண்டும்.
கோடைகால வெப்பத்தை நாம் எதிர் கொள்ள இந்த பானகத்தை வீட்டிலேயே அடிக்கடி தயார் செய்து எடுத்துக்கொள்வோம்.மேலும் திருவிழாக்களில் கிடைத்தால் தவறாமல் வாங்கி பருகுங்கள் .