கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Prakash Raj

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனவைரும் தங்களது வாக்குசாவடிகளில் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்தவகையில் பெங்களூரு மத்திய தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நடிகர் பிரகாஷ்ராஜ் ஆற்றினார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, வாக்களிப்பது என்பது முக்கியமான விஷயம். ஏனெனில் நீங்கள் தேர்ந்தெடுக்க உள்ளவர்கள் தான் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வார்கள். இதனால் வாக்களிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று. வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கின்ற தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பது அவசியமான ஒன்று. நல்ல தலைவரை தேர்ந்தெடுங்கள் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, காலை 7 மணிக்கே இவ்வளவு பேரு வந்திருக்காங்க என்றால் ஏதோ ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு என்று நம்புகிறேன். ஒரு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள துடித்துக்கொண்டு வாக்களிக்க வருகிறார்கள். இன்று ஒரு நாள் வரிசையில் நிற்கவில்லை என்றால் வருடந்தோறும் வரிசையில் நிற்கிற நிலை வரும். நான் வெறுப்பு எதிராக வாக்களித்தேன் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்