தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa le

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 155 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழை மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மழை வெள்ளத்தால் 51,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கென்யா மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளில் கனமழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கென்யாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 300 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்