13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

2nd phase polling

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.67 லட்சம் வாக்குச்சாவடிகளில், மொத்தம் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 8.08 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 5,929 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர், குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கான தேர்தல் தொடங்கியிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்