‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK OLD Fan

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.

ஐபிஎல் என்றாலே அதற்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது நாம் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு சில ரசிகர்கள் நம் கண்ணில் படுவதும் உண்டு. அது போல தான் இந்த ரசிகரும். இவர் பெயர் ராமதாஸ் 103 வயது நிரம்பிய வயதான நபர் ஆவார்.

இவர் கிரிக்கெட் மீதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதும் மிகுந்த அன்பை கொண்டவர் ஆவார். சிஎஸ்கே நிர்வாகம் அவரை சந்தித்து பேட்டி ஒன்று எடுத்துள்ளது. அதில் அவர் சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் அடிபட்டு விடுமோ என்ற பயமும் இருந்தது அதனால் பேட்டிங் செய்ய மாட்டேன் பந்து நன்றாக வீசுவேன். எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் ஆனால் கிரிக்கெட் விளையாட பயமாக இருக்கிறது.

இப்பொது நான் அதை டிவியில் பார்த்து ரசிக்கிறேன்.  மேலும், எனக்கு 20 ஓவர் போட்டிகள் மிகவும் புடிக்கும் அதை இழுக்கமாட்டார்கள் விரைவாக முடிந்து விடும் அதனால் பிடிக்கும். அந்த வீடியோவில்  அருகில் இருந்த அவரது மகன் ‘டெல்லியில் நடக்கும் சிஎஸ்கே போட்டிக்கு போவீங்களா’ என்று கேட்பார். அதற்கு ராமதாஸ், ‘நான் நடந்தே டெல்லி செல்வேன்’ என்று பதிலளித்தார். மேலும், நீங்கள் கிழவன் உங்களுக்கு வயதாகி விட்டது என்று அவரது மகன் அவரை பார்த்து கூறுவார்.

அதற்க்கு அவர் ‘ஐ ஆம் நாட் கிழவன் ..ஐ ஆம் சீனியர் யூத்’ என்று பதிலளிப்பார். அந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் மனம் நெகிழ வைக்கும் படி அமைந்திருக்கும். மேலும், அவர் ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே போட்டிகள் ஒன்றையும் தவறாமல் பார்த்து வருகிறாராம். மேலும், தோனியை பார்க்க தயாராக உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறி இருக்கிறார். சிஎஸ்கே அணி நேற்று பதிவிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்