தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Congress Candidate Manickam Tagore

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம்.

கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட பாஜக பிரமுகர் சசிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் மாணிக்கம் தாகூரின் கட்சியினர், அவரது கூட்டணி கட்சி முகவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி சீனி, கருப்பையா, காமராஜ் மீது மதுரை, விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், இன்னும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப்பட்டுவாடா நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் புகார் தொடர்பான மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதனை ஏற்று இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.? மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா.? அப்படி தள்ளுபடி செய்யப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் தெரிந்து விடும்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்