வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும் படம் தான் தனது கடைசி என்று அறிவித்திருந்தார். அண்மையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், தனது கட்சியின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இவர் நடிப்பில் தற்போது ‘GOAT’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதனிடையே, சமீபத்தில் விஜய் நடிப்பில் 2004ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. கில்லி ரீ-ரிலீஸை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கில்லி ரீ-ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில், விஜய்-க்கு அப்படத்தின் விநியோகஸ்தர் மாலை அணிவித்தபோது, “வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க” என கோரிக்கை விடுத்தார், அதற்கு விஜய் ஓகே எனக் கூறினார்.
வருசத்துக்கு ஒரு படமாச்சும் பண்ணுங்க தளபதி .. ????????
.@actorvijay #Vijay #ThalapathyVijay???? #TheGreatestOfAllTime #TheGOAT #SSMusic pic.twitter.com/jq2hysnruK— SS Music (@SSMusicTweet) April 24, 2024
இதனால், அவர் தனது முடிவை மாற்றிவிட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. கட்சிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நடிக்க வேண்டிய படத்தை முடித்துவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலில் முழுமையாக ஈடுபடப் போவதாக அவ்வாறு அறிவித்திருந்தார்.
இதனால், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இப்பொழுது, கில்லி திரைப்பட விநியோகஸ்தர் கேள்விக்கு ஓகே சொன்னது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஒருவேளை அவர் அப்பொழுது இந்த கேள்வியை கேட்டதும் வழக்கமாக பேசும் சைகையாக ஓகே சொன்னாரா என்று தெரியவில்லை. என்ன நடக்குது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.