வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர்.
கென்யாவில் மார்ச் மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரிய வெள்ள அபாய ஏற்பட வழி வகுத்தது. இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட தலைநகர் நைரோபியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதனிடையே கென்யா வானிலை ஆய்வு மையம் இன்னும் நாட்டின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.