கிரிக்கெட் உலகில் என்றும் மாஸ்டர்! சச்சினுக்கு குவிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Sachin Tendulkar

Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத வகையில் இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்து வைத்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் என மொத்தம் 15921 ரன்கள் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் இவர் தான். இன்னும் இந்த சாதனையை யாரும் முறியடிக்க கூட இல்லை. இந்த சாதனைகள் மட்டுமின்றி இன்னும் பல சாதனைகளை சச்சின் படைத்தது இருக்கிறார்.

கிரிக்கெட் உலகில் பெரிய ஜாம்பவனமாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பல பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் மூலம் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். யாரெல்லாம் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் என்பதனை பற்றி பார்க்கலாம்.

பிரக்யான் ஓஜா

சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் பிரக்யான் ஓஜா ” இன்று உங்களுக்கு பல மகிழ்ச்சியான நாள் சச்சின்! உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியையும் கிடைக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா 

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சச்சின் டெண்டுல்கருடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்.உங்கள் புகழ்பெற்ற வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உங்கள் கவர் டிரைவ்களைப் போலவே ஒரு வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” சச்சின் விளையாடுவதைப் பார்த்து எத்தனை வீரர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்கள் என்பதை நாம் கணக்கிடவே முடியாது. நாங்கள் விரும்பும் விளையாட்டின் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

யுவராஜ் சிங்

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் களத்தில் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்குவது முதல் வாழ்க்கை இலக்குகளை அடித்து நொறுக்குவது வரை, வாழ்க்கையில் உயர்ந்த இலக்கை அடைய நான் கற்றுக்கொண்டதற்கு நீங்கள் தான் காரணம் (மற்றும் சில சமயங்களில் களத்திலும் ) இதோ உங்களுக்கு எப்போதும் அன்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

முகமது கைஃப்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” சச்சின் நீங்கள் எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறீர்கள். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னுமே நிறைய விஷயங்கள் இருக்கிறது. உங்களுடைய பிறந்த நாளான இந்த நாள் இனிதா கட்டும்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்