குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!
Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசி பெரும்பாலானோர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் தோன்றும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற கேள்வி இருக்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து ஏசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது சில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அது என்னென்னவென்று பார்க்கலாம்.
AC பயன்படுத்தும் போது கடைபிடிக்கவேண்டி வழிமுறைகள் :
ஏசி காற்று நேரடியாக குழந்தையின் மேல் படும்படி படுக்க வைக்க கூடாது.ஏசியின் டெம்பரேச்சர் 24 டிகிரியில் இருந்து 28 டிகிரி வரை வைத்துக் கொள்ள வேண்டும் .24 டிகிரிக்கு கீழ் வைத்தால் ஹைபோ தெரபி போன்ற பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
ஏசி அறையை விட்டு குழந்தைகளை உடனடியாக வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. ஏசியை அணைத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்த பிறகு தான் குழந்தையை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
கை, கால், தலை போன்ற பகுதிகளை நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டால் சளி பிடிக்க நேரிடும். குறிப்பாக வயிறு மற்றும் நெஞ்சு பகுதி வெதுவெதுப்பாகவே இருக்க வேண்டும்.அதனால் குழந்தைகளின் உடலை நன்கு மூடி வைக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை ஏசியின் பில்டரை சுத்தம் செய்த வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள தூசிகளின் மூலமும், பாக்டீரியாக்களின் மூலமும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.
ஏசி காற்றில் தொடர்ச்சியாக இருக்கும் போது தோல் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்சரைஸர்[moisturizer] பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு ஏர் கூலர் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் ஏசி என்பது ரூமில் உள்ள காற்றை குளுமையாக மாற்றிக் கொடுக்கும். ஏர் கூலர் வெளியில் உள்ள காற்றை உறிஞ்சி குளுமையாக மாற்றிக் கொடுக்கும் தன்மை கொண்டது.
எனவே ஏர் கூலர் பயன்படுத்தும் போது ஜன்னல் பக்கம் அல்லது கதவு ஓரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும் ,இல்லை எனில் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
ஆகவே ஏசி மற்றும் ஏர் கூலர்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.