20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே தான் நடக்கும் படங்களில் சண்டை காட்சிகள் வந்தாலோ அல்லது ரிஸ்கான காட்சிகள் வந்தாலோ அதில் டூப் போடாமல் அவரே நடிப்பார். பலமுறை டூப் போடாமல் அவர் படங்களில் நடித்த காரணத்தால் அவருக்கு அடியும் பட்டு இருக்கிறது. அப்படி தான் ஒருமுறை கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாராம்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் காரில் இருந்து வேகமாக துரத்தி சென்று சுடுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த காட்சியின் போது தான் விஜயகாந்த் 20 அடி உயரத்தில் ரோப்பில் தொங்கிக்கொண்டு இருந்தாராம். அந்த காட்சி எடுக்க 5 டேக் மேல் ஆகி கொண்டு இருந்ததால் திடீரென அந்த ரோப் அறுந்துவிட்டதாம். இதனால் விஜயகாந்த் கீழே விழுந்தாராம்.
விஜயகாந்த் கீழே விழுந்ததும் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம். இதனால் படப்பிடிப்பு நின்று விடும் அளவிற்கு அந்த நேரம் ஆகிவிட்டதாம். கீழே விழுந்த விஜயகாந்திற்கு முதுகு பகுதியில் ரொம்பவே அடிபட்டுவிட்டதாம். இருந்தாலும் அந்த வலியை வெளிக்காட்டினால் மற்றவர்கள் சங்கடப்படுவார்கள் என நினைத்து வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம்.
பிறகு படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை தனியாக அழைத்து கொண்டு எனக்கு அடிபட்ட இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம். முக்கியமாக சண்டை பயிற்சி இயக்குனருக்கு தெரியவே கூடாது அவருக்கு தெரிந்தால் எனக்கு சண்டை காட்சிகளை குறைத்து கொடுப்பார். அப்படி அவர் குறைவாக கொடுத்தால் படம் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வராது.
எனவே அது சரியாக இருக்காது. என்னால் இப்போது நிற்க கூட முடியவில்லை எனக்கு ரொம்பவே முதுகு வலிக்கிறது. ஆனால், இது யாருக்கும் தெரிய கூடாது. எனவே, எனக்காக ஒரு சிறிய காட்சியை மட்டும் இப்போது எடுத்துவிட்டு என்னை இன்று ஒரு நாள் வீட்டிற்கு விடுங்கள் நான் நாளைக்கு திரும்ப வருகிறேன் என்று விஜயகாந்த் கூறிவிட்டாராம்.
20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் அந்த வலியை கூட தாங்கி கொண்டு படத்தை பார்த்து நினைப்பது எல்லாம் சாதாரண விஷயமே இல்லை விஜயகாந்த் போல யாருமே இருக்க முடியாது என ஆர்.கே.செல்வமணி அவரை புகழ்ந்து இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே.செல்வமணி விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை படத்தையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.