குட்கா ஊழல் …!அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் …!முத்தரசன்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ஆகியோர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில்,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ஆகியோர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.மேலும் விசாரணையை எதிர்கொண்டு குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து மீண்டும் தங்களது பதவிகளை தொடங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.