பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

LokSabha Elections 2024

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

இந்தியாவின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி  21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26இல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவுற்றதை அடுத்து வரும் ஏப்ரல் 26இல் மீதம் உள்ள 12 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார உரையின் போது, முஸ்லிம்களை “ஊடுருவிகள்” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி என குற்றசாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக கூறி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும்” என பரப்புரையில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியாக மதத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி வருவதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

மோடி தனது உரையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் “இந்தியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து மறுபங்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் கூறியதை மறுத்துள்ளது” என்றும், இவ்வாறு, வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தனது மனுவில் பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு “No Comments” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்