ஏப்.26-ம் தேதி13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல்.!

Lok Sabha election 2024 phase 2

Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிமை தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிமை (26ம் தேதி) இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில், கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மீதுமுள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களின் பட்டியல் இதோ:

1. அசாம் – 5 மக்களவை தொகுதிகள்

2. பீகார் – 5 மக்களவை தொகுதிகள்

3. சத்தீஸ்கர் – 3 மக்களவை தொகுதிகள்

4. ஜம்மு மற்றும் காஷ்மீர் – 1 மக்களவை தொகுதி (ஜம்மு)

5. கர்நாடகா – 14 மக்களவை தொகுதிகள்

6. கேரளா – 20 மக்களவை தொகுதிகள்

7. மத்தியப் பிரதேசம் – 7 மக்களவை தொகுதிகள்

8. மகாராஷ்டிரா – 8 மக்களவை தொகுதிகள்

9. மணிப்பூர் – 1 மக்களவை தொகுதி (வெளி மணிப்பூர்)

10. ராஜஸ்தான் – 13 மக்களவை தொகுதிகள்

11. திரிபுரா – 1 மக்களவை தொகுதி (கிழக்கு திரிபுரா)

12. உத்தரப் பிரதேசம் – 8 மக்களவை தொகுதிகள்

13. மேற்கு வங்காளம் – 3 மக்களவை தொகுதிகள்

முக்கிய வேட்பாளர்கள்:

  • காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் (வயநாடு தொகுதி)
  • இரண்டு முறை எம்.பி.யும், மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி –  உத்தரப்பிரதேச மாநிலம் (மதுரா தொகுதி)
  • ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான அருண்கோவில் – உத்தரப்பிரதேச மாநிலம் (மீரட் தொகுதி)
  • இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில தலைவர் பன்னியன் ரவீந்திரன் மற்றும் பாஜக கேரள தலைவர் கே சுரேந்திரன், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எதிராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் நேரடியாக களம் காண்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்