பரவசத்தில் குலுங்கிய மதுரை…வைகையாற்றில் எழுந்தருளுலிய கள்ளழகர்.!

Kallazhagar 2024

சித்திரை திருவிழா 2024 : பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கியது. சரியாக 6 மணி அளவில் ‘கோவிந்தா’ பக்தி கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில்  பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.

கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தற்பொழுது, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. நேற்றைய தினம் முக்கிய நிகழ்வான தங்கை மீனாட்சி திருமணம் முடிந்த செய்தியறிந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காலை 7.25 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றி ராம ராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்