மக்களவை தேர்தலில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக.!

BJP Surat candidate Mukesh Dalal

Election2024 : குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வாகினார்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதியன்று முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 26இல் இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்து ஜூன் 1ஆம் தேதியன்று 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் மக்களவை தேர்தல் நிறைவடைந்து ஜூன் 4ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

ஜூன் 4 மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே தற்போது ஆளும் பாஜக, 2024 தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற மே மாதம் 7ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆரம்ப தேதி கடந்த ஏப்ரல் 12இல் தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதியன்று முடிவடைந்தது. இன்று (ஏப்ரல் 22) வேட்புமனுவை வாபஸ் பெற கடைசிதேதியாகும்.

நேற்று காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். அதில் வேட்பாளரை ஆதரித்து கையெழுத்திட்டவர்களில் 2 பேரின் கையெழுத்து போலி என சம்பந்தப்பட்ட நபர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கூறியதால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வேட்புமனு ஏற்றுகொள்ளப்பட்டு இருந்தது. மீதம் உள்ள வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் குஜராத் சூரத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தலின்றி போட்டியின்றி தேர்வானார் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால். இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy