கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

black dry grapes

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் .

இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர் திராட்சை உள்ளது .மற்ற உலர் பழங்களை விட அதிக சத்துக்களை கொண்டுள்ளது. சித்தா ஆயுர்வேதா போன்ற மருத்துவத்திலும் கருப்பு உலர் திராட்சை பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்களும் அதன் மருத்துவ பயன்களும்;

அஸ்கார்பிக் ஆசிட் என விட்டமின் சி விட்டமின் பி1 , ரிபோ பிளேவின் விட்டமின் பி6 ,அயன் ,கால்சியம் ,மெக்னீசியம் பாஸ்பரஸ் ,பொட்டாசியம் சிங்க் போன்ற தாது சத்துக்களும் நிறைந்துள்ளது. டயட்ரி பைபர் என்னும் நார்ச்சத்தும் போன்ற  சத்துக்கள்  நிறைந்துள்ளது.

அனிமியாவை குணமாக்கும்;

அனிமியாவால் பலரும் அவதிப்படுவர். குறிப்பாக பெண்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இந்த பிரச்சனைக்கு ஆளாவது உண்டு. இவர்களுக்கு கருப்பு உலர் திராட்சை மிகவும் சிறந்தது.

ரத்த உற்பத்திக்கு அயன் சத்து முக்கியம் .இந்த அயன் சத்து கருப்பு உலர் திராட்சையில் அதிகம் உள்ளது . ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் முதல் நாள் இரவு 100 கிராம் கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த சோகை குறையும்.

மலச்சிக்கல் :

பொதுவாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு தான் மலச்சிக்கல் ஏற்படும். சாப்பிடும் உணவில் போதிய நார்ச்சத்து இல்லாததுதான் காரணம்.

கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது 100 கிராம் கருப்பு உலர் திராட்சையில் 4.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது மலச்சிக்கலை போக்கும்.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்;

கருப்பு உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. 100 கிராம் கருப்பு உலர் திராட்சையில் 744 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது .இந்த பொட்டாசியம் உடலுக்கு தேவையான சோடியம் உப்பினை உடலில் இருந்து வெளியேற்றி உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்;

எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகளவு உள்ளது. 100 கிராம் கருப்பு உலர் திராட்சையில் 5 கிராம் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்தினை எலும்புகள் எளிதாக எடுத்துக் கொள்வதற்கு போரான் கனிம  சத்தும் உள்ளது.

கருப்பு உலர் திராட்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் நன்கு வழுவாவதோடு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மூட்டு வலி எலும்பு தேய்மானம் ஆஷ்டியோ ஆர்த்ரடீஸ் பிரச்சனைகளை தடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்;

இரத்தத்தை சுத்தமாக்கும் திறன் இந்த கருப்பு உலர் திராட்சைக்கு உண்டு. ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவு இருப்பதால் ரத்தத்தில் உள்ள டாக்ஸின் என்னும் நச்சு கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்;

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகஅளவு இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த கருப்பு உலர் திராட்சையில் ஆன்ட்டி கொலஸ்ட்ரால் காம்பவுண்ட் இருப்பதால் LDL, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். சளி காய்ச்சல் போன்ற பாக்டீரியா தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கும்.

கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது;

கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான பாலிவினால்ஷ், பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நிறைந்துஇருக்கிறது. கண்களில் ஏற்படக்கூடிய இன்ஃப்ளமேஷன் குறைப்பதோடு கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கேன்சர் வராமல் தடுக்கும் கருப்பு உலர் திராட்சையில் நிறத்திற்கு காரணம். இதில் உள்ளAnthocynin, priscratol போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் தான் காரணம்.

இது ஒரு சிறந்த ஆன்ட்டி கேன்சில் காசினோ ஜினிக் ஆக உடலில் செயல்பட்டு கேன்சர் செல் உருவாக காரணமான ப்ரிரேடிகல்ஸ்   செல் செயல்பட்டு உடலில் கழிவுகளை வெளியேற்றும். பல்வேறு வகையான கேன்சர் வராமல் இந்த கருப்பு உலர் திராட்சை இருக்கிறது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு;

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உலர் திராட்சையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது .இதில் இயற்கையாகவே தூக்கம் வருவதற்கு மெலடோனின்  எனும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி செய்யும்.

அதிக சோர்வு தூக்கமின்மை போன்ற பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு உலர் திராட்சை எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி செய்யும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்