ஸ்டுடென்ட்ஸ் எந்த லேப்டாப் வாங்கலாம்-னு ரொம்ப குழப்பமா இருக்கா? இது தான் பெஸ்ட்!
Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம்.
தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர், அது இல்லா விட்டாலும் நாம் கைவசம் ஒரு லேப்டாப் வாங்கி வைப்பதனால் அது இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு உதவிகரமாக இருக்கும். மேலும், அது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிக உதவியாக அவர்களது வரும்கால படிப்பிற்கு அது உதவியாக இருக்கும்.
லேப்டாப் வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால் என்ன மாதிரியான லேப்டாப் வாங்குவது? மாணவர்களுக்கு ஏதுவான லேப்டாப் எது? பணம் குறைவாக லேப்டாப் வாங்கலாமா? இப்படி மாணவர்களாகிய உங்களுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கலாம். நாம் லேப்டாப் வாங்குகிறோம் என்றால் அதை சற்று பணம் செலவழித்து வாங்கலாம் ஏன் என்றால் நாம் வாங்க போகும் இந்த லேப்டாப் நமக்கு குறைந்தது ஒரு 6-7 வருடங்கள் தரமாக உழைக்க வேண்டும் என்று எதிர்ப்பரப்பில் வாங்க வேண்டும்.
அதனால் என்ன மாதிரியான லேப்டாப் யார் யார் வாங்கலாம் என்பதை பற்றி இதில் பார்க்கலாம்
அசுஸ் விவோபுக் 15 (ASUS Vivobook 15)
இந்த லேப்டாப் 15.6 அதாவது 39.62 செ.மீ ஃபுல் எச்டி (FHD) திரையுடன் உருவாக்கி உள்ளனர். மேலும் இதில் 8 ஜிபி ரேம் (RAM), 512 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ளது. இன்டெல் கோர் 12-th ஜெனெரேஷன் கொண்ட இந்த லேப்டாப் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு ஏதுவான ஒரு மடிக்கணினி என கூறலாம்.
மாணவர்களின் படிப்பிற்கு தேவைப்படும் அனைத்து சிறந்த அம்சங்கள் கொண்ட இந்த லேப்டாப் ரூ.35,990 என்ற விலையில் அமேசானில் விற்கப்பட்டு வருகிறது. மேலும், 8ஜிபி ரேம், ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் தெளிவான கல்வி சம்மந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து படிப்பதற்கு தகுதி வாய்ந்ததாக இருக்கும்.
அசுஸ் விவோபுக் 15 ஒலெட் (ASUS Vivobook 15 OLED)
இந்த லேப்டாப் இன்டெல் கோர் i3-1215U ப்ராஸஸ்ஸரால் இயங்குகிறது. மேலும், 8ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் பக்காவாக ஒரு காம்மர்ஸ் (Commerce) ஸ்டுடென்ட்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும், நீங்கள் நல்ல தரத்துடன் வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்றால் இதை தாராளமாக வாங்கலாம். இதன் டிஸ்பிளே 15.6 இன்ச் மற்றும் 60 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த லேப்டாப் அசுஸ் விவோபுக் 15 ஐ விட கிராஃபிக்ஸ்ஸில் சற்று தரமாக இருக்கும். இதனால் நீங்கள் அதிகமான பிரௌசர், ஆஃப்ஸ்களை ஒரே சமயத்தில் எந்த வித ஹாங்கும் (Hang) இன்றி உபயோகபடுத்தி கொள்ள முடியும். இந்த லேப்டாப் அசுஸ் மவுஸ்ஸுடன் (Mouse) ரூ.36,639 என்றவிலைக்கு விற்கப்படுகிறது.
அசுஸ் விவோபுக் K15 ஒலெட் (ASUS Vivobook K15 OLED)
இந்த லேப்டாப் இன்டெல் கோர் i3-1115G4 ப்ராஸஸ்ஸரால் இயங்குகிறது. மேலும், 8ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜுடன் இருந்தாலும் இதனது ரேமை 12 ஜிபி வரையில் அப்க்ரேட் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளனர். 15.6 இன்ச் அதாவது 39.62 செ.மீ உடைய ஃபுல் எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த லேப்டாப் மருவத்துறை பயிலும் அதாவது மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ்க்கு அருமையான ஒரு லேப்டாப் ஆகும்.
கிராபிக்ஸ்ஸின் தாக்கம் இதில் நன்றாக இருப்பதால் மருத்துவத்துறைக்கு பயிலும் சில அனாடமி சாஃப்ட்வேர்கள் (Anatomy) இதில் அருமையாக இருக்கும். இதில் 3-cell Li-ion யூ சீரிஸ் என்பதால் பேட்டரி பயன்படுத்தி இருப்பதால் பேட்டரியின் அம்சமும் சிறப்பாக இருக்கும். இந்த லேப்டாப் விலை ரூ.46,105 ஆக அமேசானில் விற்கப்பட்டு வருகிறது.
எச்பி விக்டஸ் கேமிங் (HP Victus Gaming )
நீங்கள் பொறியியல் மாணவர்களாக இருந்தால் இந்த லேப்டாப் உங்களுக்கு தான். 8 கோர் AMD ரைசன் 7 5800H ப்ராஸஸ்ஸரால் இயங்குகிறது. இதில் அதிக கிராபிக்ஸ் கொண்ட ஒரு வீடியோ கேம்கள் கூட விளையாடலாம் அதற்காகவே உருவாக்கப்பட்டதாகும். அதனால் ஜாவா, C+ போன்ற பொறியியலுக்கு தேவையான அனைத்து சாஃப்ட்வேர்களையும் இதில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
512GB PCIe Gen4 NVMe TLC M.2 SSD மற்றும் 16GB DDR4 ரேம் மூலம் இந்த லேப்டாப்பை அப்கிரேட் செய்தும் கொள்ளலாம். 70Wh பேட்டரி உள்ளதால் 10 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை லேப்டாப் நீடித்து உழைக்கும். மேலும், 30 நிமிடங்களில் 50% வரை வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த லேப்டாப்பின் விலை ரூ.72,990 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பொறியியல் மாணவருக்கு இதை விட ஏதுவான லேப்டாப் இருக்க முடியாது என கூறலாம்.