நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. எனக்கு அதுதான் முக்கியம்… கவுதம் கம்பீர்

Gautam Gambhir

ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கிட்டத்தட்ட முதல் பாதி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி வரும் நாட்களில் நடைபெற இருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் (இன்றைய போட்டி உட்பட) விளையாடி உள்ளனர். இதன் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் அடுத்தடுத்து நான்கு இடங்களில் உள்ளனர்.

இருப்பினும் வரும் நாட்களில் புள்ளி பட்டியலில் மாற்றம் நிகழலாம். இந்த நிலையில் எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய அணி வீரரான கவுதம் கம்பீர் கொல்கத்தா அணி ஆலோசகராக இந்த சீசன் செயல்பட்டு வருகிறார்.

அதன்படி கொல்கத்தா அணியும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. நாளை பெங்களூருவுக்கு எதிராக கொல்கத்தா அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த சூழலில் பேட்டி ஒன்றில் கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் கூறியதாவது, என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிகளிலும் முடிவுகள் தான் முக்கியம் என்பதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். செயல்முறையின் மீதோ, ஒரு செயலை சரியாக செய்தால் அது தானாகவே முடிவுகளை பார்த்துக்கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஏனென்றால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு பார்க்கத்தான் மக்கள் ஸ்டேடியதுக்கு வருகிறார்கள். இதனால் எனக்கு முடிவு தான் முக்கியம். இதுதான் எனது மனதிலும் இருக்கிறது என தெரிவித்தார். எனவே கவுதம் கம்பீரின் இந்த வெளிப்படையான பேச்சு எம்எஸ் தோனியை தாக்கும் வகையில் இருப்பதாக அவரது ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏனென்றால், எம்எஸ் தோனியின் தாரக மந்திரமே செயல்முறை தான். அதாவது பிராசஸ், ஒரு செயலை சரியாக செய்தால் அது முடிவை பார்த்துக்கொள்ளும் என்று எம்எஸ் தோனி பலமுறை கூறியிருக்கிறார், செய்தும் காட்டியிருக்கிறார். தற்போது இதற்கு மாற்றாக முடிவு தான் எனக்கு முக்கியம் செயல்முறை மீது நம்பிக்கை இல்லை என கம்பீர் கூறி இருப்பது தோனியின் ரசிகர்களை கோவமடைய செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்