அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP Advertisment Cost

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஆளும் பாஜக அரசு பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைவதை ஒட்டி, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நேற்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1ஆம் தேதி வரையில் தேர்தல் நடைபெற்று ஜூன் 4இல் மத்தியில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இப்படியான சூழலில் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் செய்த விளம்பர செலவுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. பாஜக ஆளும் அரசு என்பதால் அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் தங்கள் அரசு சாதனைகள் என (மறைமுக தேர்தல் பிரச்சாரம்) விளம்பரதிற்காக சுமார் 3,600 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பாஜக விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை விவரங்களின்படி, தொலைக்காட்சி, ரேடியோ ஆகிய தளங்கள் மூலம் விளம்பரம் செய்ய 2974 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 380 கோடி ரூபாயும், 2017-18ஆம் ஆண்டில் 372 கோடி ரூபாயும், 2018-2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 396 கோடி ரூபாயும், இறுதியாக 2023-24ஆம் ஆண்டில் 250 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

அதே போல, செல்போன் குறுஞ்செய்தி (SMS), சமூக வலைதள விளம்பரங்களுக்கு 667 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டில் 93 கோடி ரூபாயும், 2015-16ஆம் ஆண்டில் 126 கோடி ரூபாயும், 2017-18ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாயும், 2023-2024ஆம் ஆண்டில் 39 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்