தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தனது ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார், அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் வாக்களிக்க செல்வதற்கு வழிவிடாமல் சூழ்ந்து கொண்டனர்.
இதனால், அவர் வாக்களிக்க சென்ற வாக்குச்சாவடி சிறிது பதற்றத்துடன் காணப்பட்டது. தற்பொழுது, தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால், தமிழக வெற்றிக் கழக்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். விரைவில் இது குறித்து விரிவான விளக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.