‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் சரிவர விளையாடாமல் சொதப்பினார்கள். ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலியின் கூட்டணியில் சரிவிலிருந்து சென்னை அணி மீண்டது.

மேலும், இறுதியில் வந்து அதிரடியாக விளையாடிய தோனியின் உதவியோடு சென்னை அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 177 என்ற சேஸ் செய்ய களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க வீரர்களான டிகாக் மற்றும் ராகுல் இருவரின் சிறப்பான கூட்டணியில் லக்னோ அணிக்கு 134 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் 19 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இந்த போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் தோல்விக்கான காரணங்களை விளக்கி கூறி இருந்தார். அவர் பேசுகையில், “நாங்கள் களத்தில் இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் நன்றாகவே முடித்தோம். ஆனால், பேட்டிங்கின் போது பவர்பிளேக்குப் பிறகு, மிடில் ஓவர்களில் எங்களால் சரியாக பயன்படுத்த முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம்.

நாங்கள் நினைத்ததை விட 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம். இம்பாக்ட் வீரரால் கூடுதல் ரன்கள் எதிர்பார்த்தேன் அதுவும் அமையவில்லை. மேலும், இது போன்ற ஆடுகளங்கள் மந்தமாகத் இருக்கும் ஆனால் சற்று ஈரப்பதமும் இருக்கும். நாங்கள் 190 என்ற அடித்திருந்தால் இந்த போட்டியில் ஒரு நல்ல ஸ்கோராக அமைந்திருக்கும்.

மேலும் நாங்கள் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க பவர் பிளேயில் சில விக்கெட்டுகளை கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து வரவிற்கும் 3 போட்டிகளும் எங்களுக்கு சேப்பாக்கத்தில் இருக்கிறது. நாங்கள் அதை பயன்படுத்தி திரும்பி வருவோம்”, என்று போட்டி முடிந்த பிறகு ருதுராஜ் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்