கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

mgr Kovai Sarala

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் எம்.ஜி.ஆர் பணம் ரீதியாக உதவி செய்துள்ளாராம்.

கோவை சரளா நடிக்க வருவதற்கு முன்பு படிப்பில் ரொம்பவே ஆர்வம் காட்டினாராம். அந்த சமயம் இருந்தே நடிகை கோவை சரளா எம்.ஜி.ஆருடைய தீவிர ரசிகையாக இருந்து வருகிறாராம். கோவை சரளாவுக்கு சொந்த ஊர் கோவை எனவே ஒரு முறை கோவைக்கு எம்.ஜி.ஆர் வந்த போது அவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் கோவை சரளா சென்ரறாராம்.

அப்போது பெரிய பிரபலம் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் நடிகை கோவை சரளாவை அறிமுகம் செய்து வைத்தாராம். அவரை பார்த்தவுடன் எம்.ஜி.ஆர் உனக்கு நல்ல நிறையவே திறமை இருக்கிறது என்பது போல கூறினாராம். பிறகு அவருடைய கல்வி செலவுக்காக எம்.ஜி.ஆர் கட்டு கட்டாக பணம் எடுத்து கொடுத்து பெரிய உதவியை செய்தாராம்.

எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த பணத்தில் தான் நடிகை கோவை சரளாவும் படித்தாராம். எம்.ஜி.ஆர் தனக்கு உதவி செய்தது போல நாமளும் பெரிய ஆளாக வளர்ந்து உதவி செய்யவேண்டும் என்றும் கோவை சரளா அப்போதே நினைத்தாராம். அதைப்போல படப்பிடிப்பு முடிந்த பிறகு கோவை சரளா நடிக்க ஆசைப்பட்டு நடிக்க வாய்ப்பு தேடி அழைந்தாராம்.

பிறகு தான் அவருக்கு சினிமாவில் முந்தானை முடிச்சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்ததாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தாராம். முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு எம்.ஜி.ஆர் தனக்கு  செய்த உதவியை போல பல குழந்தைகளுடைய கல்வி செலவுக்கு பணம் கொடுத்ததும் உதவி செய்து வருகிறாராம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்