எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரரான ஜித்தேஷ் சர்மா இதுவரை 6 போட்டிகளில் விளையாடி வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இவர் வருகிற t20 உலககோப்பை தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவரது பேட்டிங் பார்மால் அவர் இடம்பெற மாட்டார் என அதே ரசிகர்களால் கருதப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக ரிசப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகியோர் நன்றாக விளையாடி கொண்டு வருவதால் தற்போது இவருக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் முல்லான்பூரில் உள்ள மகாராஜா ராகவேந்திர மைதானத்தில் விளையாடி வருகின்றது.
இந்தப் போட்டியின் பயிற்சியின் போது இரு அணிகளும் ஈடுபட்டு வந்த போது ஜித்தேஷ் சர்மாவை சந்தித்து பேசிய சூரியகுமார் யாதவ் சில அறிவுரைகளை அவருக்கு வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் கூறுகையில்,”நான் உன்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். நீ முதலில் உன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
நீ எப்போது களமிறங்கினாலும் ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கிறாய் அது ஏன்? டி20 கிரிக்கெட்டில் நெருக்கடியான சூழலில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொள். இது போன்ற நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டால் பொறுமையாக விளையாட வேண்டும்.
அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும்”, என்று பயிற்சியின்போது பஞ்சாப் அணியின் ஜித்தேஷ் ஷர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் அறிவுரை வழங்கி இருக்கிறார். என்னதான் எதிரணிக்கு விளையாடும் சித்தேஷ் சர்மாவிற்கு இத்தகைய அறிவுரையை வழங்கியதற்கு சூரிய குமாரின் ரசிகர்கள் அவரை இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இந்த அறிவுரையை கேட்ட சித்தேஷ் ஷர்மா இனி வரவிருக்கும் போட்டிகளில் எப்படி விளையாடுவார்? மேலும் ரன்களை குவித்து டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.