கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Bujji Babu

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான (Make-Up Artist) பஜ்ஜி பாபு நடிகர் பல படங்களில் மேக் அப் ஆர்டிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு அப்பாவாக காமெடியில் கலக்கி இருப்பார். அவர் தற்போது ஒரு தனியார் யூடுப் சேனலில் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் கமல் ஹாசனால் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.

அந்த பேட்டியில் அவர், “நான் இந்தியன் படத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது 35 நாளில் முடியும் என்று கூறிய வேலை அதையும் தாண்டி 150 நாட்கள் தாண்டி அந்த படத்தில் வேலை பார்த்தேன். அதை தொடர்ந்து அவ்வை சண்முகி படம் தொடங்கினார்கள், நான் அதிலும் வேலை பார்த்தேன். அதற்கும் சரியான ஊதியம் நான் பெறவில்லை. அப்போது திடிரென ஹைதரபாத் சினிமா துறையில் ஒரு பெரிய போராட்டம் வந்தது. அந்த போராட்டம் மிக பெரிய போராட்டமாக 3 மாதம் நடைபெற்றது.

அந்த நேரம் என் மகளின் படிப்பு தேவைக்காக ஒரு 10,000 ரூபாய் தேவைப்பட்டது. அப்போது கமல்ஹாசன் அவர்களது வீட்டிற்கு சென்று என் மகளின் படிப்பு செலவிற்காக ரூ.10,000 கேட்டேன். அப்போது அவர் இப்படி ஹைதராபாத் சினிமா துறையில் இருக்கும் டெக்னிஷியன் 40% ஊதியத்தை அதிகப்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால இப்போது தர முடியுமா என்று தெரியவில்லை, அந்த போராட்டம் முடிந்த பிறகு நான் தருகிறேன் என்று சொன்னார்.

எனக்கு என்ன செய்வேதென்றே தெரியவில்லை, மகளை படிக்க வேண்டும் அதனால் என்ன செய்ய போகிறோம் என்று மன உளச்சலுக்கு சென்று விட்டேன். எனக்கு வேறு வலி தெரியவில்லை கமல்ஹாசனின் அலுவலுகத்திற்கு சென்றேன் அங்கு அவரது பி.ஏ (PA) D.N.S (D.N.Subramaniyan) அவர்கள் இருந்தார்.

அவரிடம் எனது மேக் அப் பொருள்களை எல்லாம் ஒப்படைத்து விட்டு, ‘என்னை விட்டுருங்க நான் ஹைதரபாத்த்திற்கே சென்று வேலை பார்த்து கொள்கிறேன் ..என்னால முடியல’ என்று கூறி விட்டு வந்துவிட்டேன்”, என்று அந்த தனியார் யூடுப் சேனலின் ஒரு பேட்டியில் மனம் நொந்து பேசி இருந்தார். பஜ்ஜி பாபு அவர்கள் நம்மவர், சதிலீலாவதி, குருதிபுனல், மகளிர் மட்டும் போன்ற கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay