முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தம்மை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு விளம்பரங்களை பார்த்து வெவ்வேறு கிரீம்களை முகத்தில் தடவி பார்ப்பதும். சில கிரீம்கள் அந்த முகப்பொலிவை கொடுத்தாலும், அதிக விலை கொடுத்து தொடர்ந்து வாங்க முடியாத சூழலும்நிலவி வருகிறது.
அதனை தவிர்த்து, வீட்டுலலேயே முகப்பொலிவு பெறுவதற்கு இயற்கையாக கிரீம் தயார் செய்யலாம். அதனை எப்படி தயார் செய்வது என்பதை இந்த செய்தி குறிப்பில் நாம் காணலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாளை ஜெல் – 2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
காய்ச்சிய பால் – 1 ஸ்பூன்.
பாதாம் எண்ணெய் அல்லது [தேங்காய் எண்ணெய்] – 1/2 ஸ்பூன்.
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அதனுடன் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அரை ஸ்பூன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும் . நன்கு கலக்கும் பொழுது ஒரு கிரீம் பதத்திற்கு நமக்கு கிடைக்கும்.
இந்த கிரீமை நாம் இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் மாற்றம் ஏற்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது முகம் பளபளப்பு கூடும் முகப்பொலிவு ஏற்படும். கருமை நிறம் மாறும். இந்த கிரீமை ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.