சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா? இதோ உடனடி தீர்வு.!

urinary irritation

நீர் கடுப்பு -சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட காரணமும்,  உடனடி நிவாரணம் பற்றியும் இப்பதிவில் காண்போம்.

கோடை காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். இது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும், இதற்கான காரணத்தை பார்ப்போம்.

காரணங்கள்:

தண்ணீர் குறைவாக குடிப்பதன் மூலமும் ,வியர்வையின் அளவு அதிகமாவதன்  காரணமாகவும் ,சிறுநீரில் உள்ள சமநிலை குறைபாட்டால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. போதிய அளவு நம் உடலில் தண்ணீர் இல்லாத போது நம் உடல் சூடாகிவிடும் இதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது.

மேலும் சுகாதாரம் அற்ற கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் தொற்று ஏற்படுகிறது இதன் விளைவாக கூட சிறுநீர் எரிச்சல் ஏற்படலாம்.

நீர்க்கடுப்பு குணமாக வீட்டு குறிப்புகள்:

  • இந்த மாதிரி நேரங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் தண்ணீர் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து மிதமான சூட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும் .இரண்டு  சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு அந்த தண்ணீரை குடிக்க வேண்டும் .இவ்வாறு செய்தால் அரை மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
  • புளியை  கரைத்து வடிகட்டி  அதில் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • பழைய கஞ்சி தண்ணீரை உப்பு சேர்க்காமல் வயிறு நிரம்ப குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் 15 நிமிடத்தில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி முழுங்கி விட வேண்டும் .இந்த முறையை மேற்கொள்ளும் போது அரை மணி நேரத்தில் நீர்க்கடுப்பு மற்றும் எரிச்சல் சரியாகும்.
  • மேலும்  அடி வயிறு மற்றும் தொப்புள் பகுதிகளில் நல்லெண்ணையை தேய்த்து விட வேண்டும்.
  • பிறப்புறுப்பில் சுடு தண்ணீரைக் கொண்டு கழுவி வருவதன்  மூலம் சிறுநீரகத்தில் ஏதேனும் தொற்று ஏற்பட்டு இருந்தால் சரியாகிவிடும்.
  • வாரத்திற்கு ஒரு முறையாவது நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணையால் காலை வேளையில் தேய்த்து அரை மணி நேரம் இளம் வெயிலில் நின்று  குளித்து வந்தால் உடல் சூடு ஏற்படாமல் இருக்கும் .மேலும் விட்டமின் டி சத்தும் கிடைக்கும். இதனால் சரும நோய் அண்டாது. உடல் சூட்டினால் முடி கொட்டாது.

ஆகவே சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது கடுப்பு ஏற்பட்டால் இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி பயனடையுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn