இறுதி நாள் பிரச்சாரம்… மேடையில் கண் கலங்கிய அண்ணாமலை.!

Annamalai file image

Annamalai : கோவையில் முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பின் ஈடுபட்ட போது பெற்றோர் பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து பேசிய அண்ணாமலை கண்கலங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று கோவையில் உள்ள கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்த மேடையில் அவர் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்த உடன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலை வந்துவிட்டது. கடந்த ஓராண்டு காலமாக இங்கு வந்து உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், எனக்கு துளியும் நேரம் கிடைக்கவில்லை. இதனால் நேற்றைய தினம் உறுதியாக நான் உங்களை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று இங்கு வந்து உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன். தற்போது உங்களை காண எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் நான் மிகவும் பாக்கியம் செய்துள்ளேன்”, என்று உருக்கமாக பேசி கொண்டிருக்கும் போது அண்ணாமலை கண் கலங்கினார். அதன்பின் அங்கு இருந்த தொண்டர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோஷமிட்டு அவரை தேற்றினார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்