லிங்கு சாமி சொன்ன கதை! என்னை விடுங்க என தப்பித்த கார்த்தி?
Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘பையா’. இந்த திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டானது.இதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது.
அந்த அளவிற்கு ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்து வருகிறது பையா திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி நடிகர் கார்த்தியிடம் பையா படத்திற்கு பிறகு கூறிய கதை குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
பையா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை சந்தித்து லிங்குசாமி மீண்டும் ஒரு கதையை கூறினாராம். அந்த கதையில் தமன்னா தான் ஹீரோயினாகவும் நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த கதையை கேட்டவுடன் நடிகர் கார்த்தி எனக்கு இப்போது திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. இந்த சமயத்தில் நான் இப்படியான இளமையான கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக வருமா? என எனக்கு பயமாக இருக்கிறது.
இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி சரியாக இருக்கும் என்று கார்த்தி கேட்டாராம் அவர் கேட்டதும் லிங்குசாமிக்கு சற்று நியாயமாகப்பட்டதாம். உடனடியாக வேறு கதையை எழுதிவிட்டு வருகிறேன் ஆனால் பையா படத்தில் நடித்தது போல நீங்கள் இருவரும் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று இங்கு சாமி கூறி இருக்கிறாராம்.