உச்சத்தில் பதற்றம்… ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு!

Israel Iran war

Iran Israel Conflict : ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலக நாடுகள் வலியுத்தியும் போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஏரளாமானோர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது வாழ்த்தரத்தை இழந்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேல் – ஈரான் இடையே அவ்வப்போது நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் மீது ஈரான் நாடு நேரடி தாக்குதலில் ஈடுபட்டது இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழலில் இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்தவகையில், சனிக்கிழமை 13ம் தேதி இரவு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது ஈரான். இதுதொடர்பான வீடியோ கட்சிகளும் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டங்களையும் பதிவு செய்தது.

இந்த தாக்குதலில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதனால் இஸ்ரேல் – ஈரான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரான் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்க இஸ்ரேலின் அமைச்சரவை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளது. அப்போது, ஈரான் மீது தாக்கல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் எனவும் இஸ்ரேலிய ராணுவத்தின் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அடுத்த வினாடிகளிலேயே பதிலடி கொடுப்போம் என ஈரான் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்